ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்


ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்
x
தினத்தந்தி 24 Sept 2025 8:08 PM IST (Updated: 24 Sept 2025 8:49 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பீலா வெங்கடேசன் செயல்பட்டார்.

சென்னை

தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் . பீலா வெங்கடேசன் (வயது 55). ஐஏஎஸ் அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.

இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பீலா வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி ஆகும். பீலா வெங்கடேசனின் தந்தை எல்.என்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் டிஜிபியாக பதவி வகித்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story