பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் எண் மாற்றம்: இன்று முதல் அமல்


பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் எண் மாற்றம்: இன்று முதல் அமல்
x

பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் எண் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

கர்நாடக மாநிலம் பெங்களூரு-எர்ணாகுளம் மற்றும் எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஓசூர், தர்மபுரி, சேலம், கோவை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களின் எண்கள் தற்போது புதிதாக மாற்றம் செய்து இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது என தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலின் புதிய எண்-16377 (பழைய எண்-12677) ஆகவும், மேலும், எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலின் புதிய எண்-16378 (பழைய எண்-12678) ஆகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில்களின் புதிய எண்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story