ஏப்ரல் 2026 -ல் தமிழகத்தில் தேஜகூ ஆட்சி - அமித்ஷா பேச்சு

ஒட்டும்மொத்த தமிழ்நாடு அரசின் வரவு செலவு அறிக்கை டாஸ்மாக், கடனில் இயங்கிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை பாலன் நகர் பள்ளட்திவயலில் நடைபெறூம் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அமித்ஷா பேசியதாவது:-
தமிழ்நாட்டின் புனிதமான மண்ணுக்கு என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாபெரும் மகத்தான தமிழ்மொழியில் உரையாற்ற முடியவில்லை என மன்னிப்பு கோருகிறேன். நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழாவில் கூறுகிறேன் ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சி பாதையில் பங்கேற்போம், அணிவகுப்போம். எப்படியாவது திமுக கூட்டணி ஆட்சியை நாம் ஒழித்தே தீருவோம். முடிவு கட்டியே தீருவோம்.
ஒட்டுமொத்த பாரதத்தில் மிகப்பெரிய ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்று சொன்னால் அது திமுகதான். தேர்தல் அறிக்கையில் மிகக்குறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கும் ஆட்சி திமுகதான். ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீர வேண்டும். அதற்கு நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரசின் ஒரே நோக்கம் உதயநிதியை முதல்-அமைச்சராக்குவதான்.ஊழலுக்கான அடையாளமாகிவிட்டது திமுக. சிறைக்கு சென்றபின்னும் 248 நாள் அமைச்சராக தொடர்ந்தார் ஒருவர். கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது, மணல் கொள்ளையில் ஒரு தலைவரின் பெயர் உள்ளது. ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வு, ரெயில் நிலைய அறிவிப்பில் தமிழ் இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்தார்,
பனாரஸ் பல்கலை.யில் பாரதி பெயரில் இருக்கை,திருக்குறளை 13 மொழிகளில் மொழியாக்கம் செய்தவர் பிரதமர் மோடி. அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்த செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவி அழகுபார்க்கிறார் பிரதமர் மோடி.துணை ஜனாதிபதியாக தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை அமர்த்தி அழகு பார்த்தவர் பிரதமர் மோடி.அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கி போராடும் அவல நிலை, தூய்மை பணியாளர்கள் மீது தடியடி நடக்கிறது. போராடும் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
விவசாயிகளை திமுக அரசு கொடுமைப்படுத்துகிறது. மற்ற மாநிலங்களின் குப்பை கிடங்காக ஆக்கியுள்ளது.இந்துக்கள்,அவர்களது சமய நம்பிக்கை, வழிபாட்டுக்கு முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது.
நிலக்கரி ஊழல், ரூ,6,000 கோடி ஊழல் விவகாரத்தில் திமுக அமைச்சர்களின் பெயர்கள் உள்ளன. இத்தனை ஊழல் நிறைந்த அமைச்சரவை, அமைச்சர்களை வைத்து தமிழ்நாடு வளர்ச்சி காண முடியுமா? ஒட்டும்மொத்த தமிழ்நாடு அரசின் வரவு செலவு அறிக்கை டாஸ்மாக், கடனில் இயங்கிறது.
இந்துக்கள், அவர்களது சமய நம்பிக்கை, வழிபாட்டுக்கு முடிவு கட்டும் வகையில் தமிழக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் அயோத்தி ராமர் பூமி பூஜையின்போது அறிவிக்கப்படாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்துக்களின் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பின் மாண்பை, இந்துக்களின் சமய நம்பிக்கையை குலைதுள்ளீர்கள் ஸ்டாலின். அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கி போராடும் அவல நிலை, தூய்மை பணியாளர்கள் மீது தடியடி நடக்கிறது. 2014 -2024 வரை மோடி அரசு தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடியை கொடுத்துள்ளது. காங், திமுக செய்யாததை நாம் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






