தி.மு.க. கூட்டணி கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது- கே.என்.நேரு

தமிழகம் முழுவதும் 56,000 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என கே.என்.நேரு தெரிவித்தார்
திருச்சி,
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் 56,000 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. .அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்களோடு இணைய பலர் காத்திருக்கிறார்கள்.
இதுவரை பா.ஜ.க.வினரால் தங்கள் கூட்டணியை இறுதிப்படுத்த முடியவில்லை. எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் எல். முருகன் ஈடுபடுகிறார் . அவரது எண்ணம் நிறைவேறாது.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்டு கட்சி கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார். இது குறித்து தான் கருத்து கூற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






