மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்


மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
x

சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்படாததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என அதிகாரிகள் உறுதி செய்தனர்.

மதுரை,

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபரக்ள் மின்னஞ்சல் மூலம் இன்று மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதேபோல், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவிற்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இரு இடங்களிலும் நடந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என அதிகாரிகள் உறுதி செய்தனர். தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story