நாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி


நாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 5 May 2025 6:50 PM IST (Updated: 6 May 2025 12:15 PM IST)
t-max-icont-min-icon

வளர்ப்பு நாயை காப்பாற்ற முயற்சி செய்த சிறுவன் குட்டைக்குள் தவறி விழுந்து விட்டார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பருவாய் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (வயது 14). இவர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வெளியில் சென்றார்.

மாணவர் தனது வளர்ப்பு நாயையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றிருக்கிறார். அப்போது சுமார் 15 அடி ஆழமான குட்டை அருகே சிறுவன் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவனின் வளர்ப்பு நாய் எதிர்பாராதவிதமாக தண்ணீர் குட்டையில் இறங்கியது.

அந்த குட்டையானது ஆழமாக இருந்ததை அறியாத சிறுவன் நாயை காப்பாற்ற முயற்சி செய்து குட்டைக்குள் தவறி விழுந்து விட்டார். இதனால் சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story