புராஜக்ட் வேலை: வாடகைக்கு வீடு எடுத்து கல்லூரி மாணவியுடன் காதலன் உல்லாசம்: பின்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்


புராஜக்ட் வேலை: வாடகைக்கு வீடு எடுத்து கல்லூரி மாணவியுடன் காதலன் உல்லாசம்: பின்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 3 Jun 2025 4:00 PM IST (Updated: 3 Jun 2025 5:11 PM IST)
t-max-icont-min-icon

ஐசிஎப் வீட்டில் கடந்த 10 நாட்களாகவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சென்னை,

சென்னை ஐசிஎப் ராஜீவ் காந்தி நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு19 வயதான இளம்ஜோடி வாடகைக்கு குடி வந்துள்ளனர். இருவரும் தங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறி ரூ. 4 ஆயிரம் வாடகை கொடுத்து சிறிய வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் வாலிபர் தூக்கில் தொங்கியநிலையில் இருந்ததை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக பார்த்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஐசிஎப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.வாலிபர் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டநிலையில், அவருடன் தங்கியிருந்த இளம்பெண் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இருவரின் உடலையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

போலீசார் விசாரணையில் ஒரே வீட்டில் உயிரிழந்த இருவரும் கல்லூரி மாணவர்-மாணவி என்பது தெரியவந்தது. அவர்களது பெயர் ஆகாஷ்-அபிநயா என்பதும் இருவரும் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.அபிநயா பி.ஏ ஆங்கில பொருளாதாரமும், ஆகாஷ் பிஎஸ்சியும் படித்து வந்தநிலையில் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில்தான் இருவரும் புராஜக்ட் வேலைக்காக சென்னை செல்வதாக கூறி விட்டு வந்ததும், இங்கு அவர்கள் வீடு வாடகை எடுத்து கணவன் - மனைவி போல இருவரும் இரவிலும் பகலிலும் உல்லாசமாக குடும்பம் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஐசிஎப் வீட்டில் கடந்த 10 நாட்களாகவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு திடீரென அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு உள்ளது. அப்போது காதலி அபிநயாவை ஆகேஷ் சரமாரியாக முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அபிநயா சுருண்டு விழுந்து பலியாகி உள்ளார். இதனால் பயந்துபோன ஆகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தநிலையில், எதற்காக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் இருவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இருவரின் மரணம் பற்றியும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசை ஆசையாய் வளர்த்த தங்களது பிள்ளைகள் இப்படி செய்துவிட்டார்களே என 2 குடும்பத்தை சேர்ந்தவர்களும் வேதனையில் கண்ணீர் வடித்தப்படி உள்ளனர். இளம்காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் ஐசிஎப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story