வீடு புகுந்து சிறுமி மீது கொடூர தாக்குதல்.. வாலிபர் செயலால் அதிர்ச்சி


வீடு புகுந்து சிறுமி மீது கொடூர தாக்குதல்.. வாலிபர் செயலால் அதிர்ச்சி
x

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

கோவை,

தஞ்சையை சேர்ந்தவர் லோகேஷ் சரவணன்(வயது 28). கோவை விமான நிலையம் அருகே பூங்கா நகரில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு இனிப்பு கடையில் கடந்த 3 ஆண்டுகளாக ஊழியராக பணிபுரிந்து வந்தார். அந்த இனிப்பு கடையில் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி(34) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அவர் தனது மகள் மகாலட்சுமி(16) மற்றும் மகன் கனி கண்ணன்(12) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இதற்கிடையில் சரஸ்வதி உள்பட தனது சக ஊழியர்களிடம் லோகேஷ் சரவணன் கடன் வாங்கியிருந்தார். ஆனால், வாங்கிய கடனை அவர் திருப்பி தரவில்லை. இதனால் லோகேஷ் சரவணனை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து இனிப்பு கடை நிர்வாகம் நீக்கியது.

இந்த நிலையில் சரஸ்வதி வீட்டில் இல்லாதபோது, லோகேஷ் சரவணன் அவரது வீட்டிற்குள் நுழைந்து ஒரு அலமாரியை கையில் கொண்டு வந்த ‘ஸ்க்ரூ டிரைவரால்’ உடைக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது சரஸ்வதியின் மகள் மகாலட்சுமி அவரை தடுத்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ் சரவணன் அவரது கழுத்தில் ‘ஸ்க்ரூ டிரைவரால்’ குத்தியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த மகாலட்சுமி அலறி துடித்தாள். சத்தம் கேட்டு கனிகண்ணன் ஓடி வந்து அவளை காப்பாற்றினார். அவரை லோகேஷ் சரவணன் கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து மகாலட்சுமியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கனிகண்ணன் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிக்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பீளமேடு போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோகேஷ் சரவணனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story