தமிழக பட்ஜெட் 2025-26 : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்- தங்கம் தென்னரசு


தினத்தந்தி 14 March 2025 5:40 AM IST (Updated: 14 March 2025 1:06 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பட்ஜெட் 2025-26 -ல் வெளியாகும் அறிவிப்புகளை உடனுக்கு உடன் இங்கே அறிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 14 March 2025 10:08 AM IST

    சென்னைக்கு அருகே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் உருவாக்கப்படும்: மெட்ரோ வசதி, பேருந்து வசதி, சாலை வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்படும்- தங்கம் தென்னரசு

  • 14 March 2025 10:02 AM IST

    வேளச்சேரி - கிண்டி வரை மேம்பாலம்

    வேளச்சேரி பிரதான சாலை முதல் கிண்டி வரை ரூ.310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும். கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: தங்கம் தென்னரசு

  • 14 March 2025 9:56 AM IST

    ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

  • 14 March 2025 9:49 AM IST

    தமிழக சட்டப்பேரவையில்  இருந்து அதிமுகவை தொடர்ந்து பாஜகவும் வெளிநடப்பு செய்துள்ளது.

  • 14 March 2025 9:49 AM IST

    • பழமையான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
    • வெளிநாடுகளிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ. 2 கோடி ஒதுக்கீடு
    • திருக்குறளை உலகம் எங்கும் பரப்புவது நமது கடமையாகும்; 25 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள், உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
    • இலக்கியங்களை மொழிபெயர்க்க முதல் கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு
    • ஐநா அவையில் உள்ள 193 மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்
    • ஆண்டு தோறும் உலகத்தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்

    - தங்கம் தென்னரசு பட்ஜெட் உரை

  • 14 March 2025 9:44 AM IST

     


  • 14 March 2025 9:43 AM IST

    நம் உரிமைகளைக் காக்கும் முதலமைச்சரை நாடே பாராட்டிக்கொண்டு இருக்கிறது-நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • 14 March 2025 9:41 AM IST

    எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டை சமநிலை தவறாமல் வழிநடத்துவோம்: கல்வி, சுகாதாரம், வேளாண்மை தொழிலில் தமிழகம் சிறந்து விளங்க 100 ஆண்டுகளுக்கு முன்பே விதை போடப்பட்டுள்ளது. இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் நடைபோடுகிறது- தங்கம் தென்னரசு

  • 14 March 2025 9:35 AM IST

    தமிழக பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து வருகிறார். பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு இடையே பட்ஜெட் உரையை தங்கம் தென்னரசு  வாசித்து வருகிறார்.

  • 14 March 2025 9:32 AM IST

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது: 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை சற்று நேரத்தில் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.

1 More update

Next Story