வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரெயில் சேவைகளில் மாற்றம்

திண்டிவனம் யார்டில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
விழுப்புரம்,
சென்னை ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட திண்டிவனம் யார்டில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் காரணமாக, சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 66045) வருகிற 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் திண்டிவனம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில் திண்டிவனத்திலேயே நிறுத்தப்படும்.
அதுபோல் விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்- சென்னை கடற்கரை பயணிகள் ரெயில் (வண்டி எண் 66046) வருகிற 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் விழுப்புரம்- திண்டிவனம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரெயில் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டுச்செல்லும்.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் எழும்பூர்- மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12635) வருகிற 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும். இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






