பராமரிப்பு பணி: கோவை-பாலக்காடு ரெயில் இயக்கத்தில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக கோவை-பாலக்காடு ரெயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் ரெயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி-பாலக்காடு ரெயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
திருப்பூர் அருகே ஊத்துக்குளி பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்காரணமாக 23, 25, 27 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி -பாலக்காடு விரைவு ரெயில் (எண் 16843) திருச்சி- ஊத்துக்குளி ரெயில் நிலையம் இடையே மட்டும் இயக்கப்படும். ஊத்துக்குளியில் இருந்து பாலக்காட்டுக்கு முன்பதிவில்லா ரெயில்கள் மேற்கண்ட தேதிகளில் இயக்கப்படும்.
வழக்கமாக நின்று செல்லும் அனைத்து நிலையங்களிலும் இந்த ரெயில் நின்று செல்லும். அதேபோல் 26-ந் தேதி பிலாஸ்பூரில் இருந்து புறப்படும் பிலாஸ்பூர்- எர்ணாகுளம் விரைவு ரெயில் (எண் 22815) சேலம் - கோவை இடையே 1 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






