சென்னை: அண்ணா நகரில் பயங்கர தீ விபத்து

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 10 தீயணைப்பு வாகனங்களுடன் விபத்து நடத்து இடத்திற்கு விரைந்தனர்.
சென்னை,
சென்னை, அண்ணாநகரில் உள்ள முதலாவது நிழற் சாலையில் பேப்பர் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் இன்று மாலை நேரத்தில் தீ ஏற்பட்டது. இந்த தீயானது சில நிமிடங்களிலேயே மளமளவென எரியத்தொடங்கியது. இதனைக்கண்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து வெளியேறினர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 10 தீயணைப்பு வாகனங்களுடன் விபத்து நடத்த இடத்திற்கு விரைந்தனர்.
குடோனில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குடோனுக்கு அருகில் பட்டாசு வெடித்தபோது விழுந்த தீப்பொறியால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.






