சென்னை: தோழி வீட்டில் நகைகளை திருடிய பெண் கைது

ஜெயலட்சுமியின் தோழியான மோனிஷா என்பவர்தான் நகைகளை திருடியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
சென்னை: தோழி வீட்டில் நகைகளை திருடிய பெண் கைது
Published on

சென்னை,

சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ஜெயலட்சுமி என்பவரது வீட்டில் இருந்த 2 தங்கச் செயின், ஒரு டாலர் மற்றும் ஒரு மெட்டி ஆகியவை மாயமாகின. இது குறித்து காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஜெயலட்சுமியின் வீட்டிற்கு சமீபத்தில் சென்ற அவரது தோழிகள், உறவினர்கள் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, ஜெயலட்சுமியின் தோழியான மோனிஷா என்பவர்தான் நகைகளை திருடியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோனிஷாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நகைகளை மீட்டு ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com