சென்னை: திடீரென தீ பிடித்து எரிந்த கார் - வீடியோ காட்சி


சென்னை:  திடீரென தீ பிடித்து எரிந்த கார் -  வீடியோ காட்சி
x
தினத்தந்தி 9 Jun 2025 10:09 AM IST (Updated: 9 Jun 2025 10:10 AM IST)
t-max-icont-min-icon

பூபதி மற்றும் அவரது நண்பர்கள் காரில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினர்.

சென்னை,

செங்குன்றம் விலங்காடு பகுதியை சேரந்தவர் பூபதி. இவர் தனது நண்பர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு, மயிலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை திண்டிவனம் அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுக்கப்புக்கட்டையில் மோதியது.

இதனையடுத்டு இந்த மோதல் காரணமாக கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக்கண்ட பூபதி மற்றும் அவரது நண்பர்கள் காரில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

கார் விபத்தில் சிக்கிய நிலையில் முற்றிலும் எரிந்து சேதமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனையடுத்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



1 More update

Next Story