சென்னை கே.கே.நகர்; கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி

கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை கே.கே.நகர், பி.டி.ராஜன் சாலையில் அருள்மிகு சக்திவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் புகுந்து, உண்டியலை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயற்சித்துள்ளார்.
அந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர், கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சாலிகிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் (வயது 42) என்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்
Related Tags :
Next Story






