சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் - 19.08.2025

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் அளிக்கப்பட இருக்கிறது.
சென்னை,
சென்னையில் நாளை (19.08.2025) காலை 09:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அத்தியாவசிய பராமரிப்பு பணியின் காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''தண்டையார்பேட்டை கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 230 கி.வோ. தண்டையார்பேட்டை துணை மின்நிலையத்தின், 110 கி.வோ. பஸ் கப்ளரில் அவசரமாக மாற்றும் பணிகள் மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் 33/11 கி.வோ தண்டையார்பேட்டை துணைமின்நிலையத்தில் உள்ள 11கி.வோ மின் பாதைகளில் அத்தியாவசிய பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் நாளை (19.08.2025) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச். சாலை, கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ. சாலை, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி. கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு, மன்னப்பன் தெரு, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள் கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, மேயர் பாசுதேவ் தெரு ஆகிய இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் அளிக்கப்படும்'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






