சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்


சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 26 Aug 2025 1:10 PM IST (Updated: 26 Aug 2025 2:26 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.5 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சவுந்தரராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் முறைகேடுகள் குறித்து விசாரித்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து முறைகேட்டில் சிக்கிய 5 அலுவலர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட சவுந்தரராஜனுக்கு பதிலாக புதிய முதல்வராக சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story