புதிய எதிர்க்கட்சிக்கு சவாலாக விளங்கும் முதல்-அமைச்சர்: விஜய் குறித்து ரஜினிகாந்த் மறைமுக பேச்சு..?


புதிய எதிர்க்கட்சிக்கு சவாலாக விளங்கும் முதல்-அமைச்சர்: விஜய் குறித்து ரஜினிகாந்த் மறைமுக பேச்சு..?
x
தினத்தந்தி 14 Sept 2025 7:48 AM IST (Updated: 14 Sept 2025 10:15 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக திகழ்கிறார் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி தமிழக அரசு சார்பில், "சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, “தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்திய நாட்டு அரசியலில் ஒரு நட்சத்திரமாக, இந்திய நாட்டை ஆளும் கட்சியினருக்கும், புதிய, பழைய எதிர்க்கட்சியினருக்கும், ஒரு சவாலாக, வாருங்கள் 2026 தேர்தலில் பார்க்கலாம் என்று தனக்கே உரிய புன்னகையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனது நண்பர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், புதிய எதிர்க்கட்சிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவாலாக இருக்கிறார் என்று, த.வெ.க. தலைவர் விஜய் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக பேசியுள்ளார் என சமூக வலைதளங்களில் பலர் பரபரப்பாக கருத்துகளை பதிவிட்டு விவாதித்து வருகின்றனர்.

1 More update

Next Story