மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
x

மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நடக்கிறது. இந்தநிலையில் நாளை மறுநாள் (30-ந்தேதி) நடைபெறும் குருபூஜை விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், தென்காசி, கோவில்பட்டி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் அங்கிருந்து கோவில்பட்டிக்கு புறப்பட்டார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி மேற்கு நகர தி.மு.க. அலுவலகம் கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோட்டில் கட்டப்பட்டுள்ளது. அதில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த தி.மு.க. அலுவலக கட்டிடம் மற்றும் கருணாநிதி உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் தென்காசிக்கு புறப்படுகிறார். தென்காசி மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2.44 லட்சம் பயனாளிகளுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

1 More update

Next Story