புதுக்கோட்டை; கோவில் திருவிழாவில் மோதல் - 5 பேருக்கு அரிவாள் வெட்டு


புதுக்கோட்டை; கோவில் திருவிழாவில் மோதல் - 5 பேருக்கு அரிவாள் வெட்டு
x

மோதலை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட வடகாட்டில் இன்று கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில், 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும், அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரிவாள் வெட்டில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையேயான மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story