கோவை: வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு


கோவை: வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு
x

வீடு திறந்து கிடப்பதையும் அலமாரியில் இருந்த நகை, பணம் திருட்டு போய் இருப்பதையும் பார்த்து வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

கோவை,

கோவை செல்வபுரம் தேவேந்திரா தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 35). இவர் காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சசிக்குமார் சம்பவத்தன்று அவரது தாயாருடன் வீட்டை பூட்டி விட்டு, கோவில் திருவிழாவில் பங்கேற்க திருச்செந்தூருக்கு சென்றார்.

இந்த நிலையில் அவரது வீடு பூட்டி இருப்பதை பார்த்த மர்ம நபர்கள் சிலர் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அலமாரியில் வைத்திருந்த கம்மல், மோதிரம், தங்கசங்கிலி உள்பட 6 பவுன் தங்க நகைகளையும், ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரத்தையும் திருடி சென்று விட்டனர். இதற்கிடையே சசிக்குமார் திருச்செந்தூரில் இருந்து கோவை திரும்பி வந்தார்.

அப்போது வீடு திறந்து கிடப்பதையும் அலமாரியில் இருந்த நகை, பணம் திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடியவரை தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story