கோவை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு; அணிவகுப்பு நடத்த போலீசார் மனுத்தாக்கல்


கோவை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு; அணிவகுப்பு நடத்த போலீசார் மனுத்தாக்கல்
x

கோவையில் நடந்த இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கோவை,

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவரும், கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயது வாலிபரும் காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் கோவை விமான நிலையத்தின் பின்புறம் பிருந்தாவன்நகர் காட்டு பகுதியில், கடந்த 2-ந்தேதி இரவு காரில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.

நள்ளிரவு 11 மணி அளவில் அந்த வழியாக மொபட்டில் 3 பேர் வந்தனர். இருள் சூழ்ந்த பகுதியில் கார் நிற்பதை பார்த்து அருகில் சென்று பார்த்தனர். மேலும் கல்லூரி மாணவியை தூக்கி சென்று 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மாணவியின் காதலன் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் நடந்த இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக 7 தனிப்படை அமைக்கப்பட்டு வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். கடந்த 4-ம் இரவு அந்த 3 பேரும் கோவை துடியலூர் வெள்ளக்கிணறு அருகே துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), கார்த்தி என்ற காளீஸ்வரன்(20). இவர்களது உறவினரான மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி (20) என தெரியவந்தது. இதில் சதீஷ், கார்த்தி ஆகியோர் அண்ணன், தம்பி ஆவர். இவர்கள் மீது கோவை கிணத்துக்கடவு பகுதியில் கொலை வழக்கு, பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், கைதான மூவரையும் அப்பெண் முன்பு அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பீளமேடு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

1 More update

Next Story