காதலி பேசாததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


காதலி பேசாததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர், டியூசன் சென்டரில் படிக்க வந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 2½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

சென்னை

சென்னை ஆதம்பாக்கம் கரிகாலன் தெருவை சேர்ந்தவர் ஆண்டோ சுஜன் (வயது 19). சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் ஆண்டோ சுஜன் சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூங்க சென்றுள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து எழுந்து வராததால் தாயார் அறையை திறந்து பார்த்தார். அப்போது ஆண்டோ சுஜன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து ஆதம்பாக்கம் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் ஆண்டோ சுஜன் டியூசன் சென்டரில் படிக்க வந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 2½ வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கடந்த 2 மாதங்களாக ஆண்டோ சுஜனுடன் பேசுவதை தவிர்த்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து ஆண்டோ சுஜன் தற்கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

1 More update

Next Story