பச்சை குத்தி இருந்ததால் நிராகரிப்பு: ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு


பச்சை குத்தி இருந்ததால் நிராகரிப்பு: ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு
x

கோப்புப்படம் 

ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கல்லூரி மாணவர் விரும்பினார்.

மதுரை

மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் யோகசுதீஷ் (17 வயது). மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று யோகசுதீஷ் விரும்பினார். இதற்காக, பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், ஈரோட்டில் நடந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் யோகசுதீஷ் கலந்துகொண்டார். அப்போது அவரது கையில் பச்சை குத்தி இருந்ததால், அதிகாரிகள் அவரை நிராகரித்ததாக தெரிகிறது. இதனால், கடந்த சில தினங்களாக அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், யோகசுதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கையில் பச்சை குத்தி இருந்ததால் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் நிராகரிக்கப்பட்டதே இந்த சம்பவத்துக்கான காரணம் என தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story