ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் இயற்ற ஆணையம்: கி.வீரமணி வரவேற்பு

இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கே வழி காட்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபையில் ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டமொன்றை இயற்றிட, ஓய்வுபெற்ற நீதிபதி கே.எம்.பாஷா தலைமையில் ஒரு தனி ஆணையம் அமையும். அதன் வழிகாட்டுதலையொட்டி, அடுத்து ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் உருவாகும்'' என்று விடுத்துள்ள இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கே வழி காட்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் ஆகும்.
சாதி ஒழிப்பு முயற்சிக்கான ஆணவப் படுகொலை தடுப்புச் சட்ட ஏற்பாட்டுக்கான முன்னெடுப்புக்கு எங்களது ‘டபுள் சல்யூட்' வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story






