சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சட்ட மசோதா தயாரிக்க ஆணையம் - இந்திய கம்யூ. கட்சி வரவேற்பு


சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சட்ட மசோதா தயாரிக்க ஆணையம் - இந்திய கம்யூ. கட்சி வரவேற்பு
x

கோப்புப்படம் 

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர கொள்கை முடிவு எடுத்து, ஆணையம் அமைத்திருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

சென்னை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வரும் சாதி ஆணவக் கொலைகளை தடுக்கத் தனி சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என இடதுசாரி கட்சிகள், ஜனநாயக கட்சிகள், சமூக அறிஞர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை அமைப்புகள் என பல தரப்பினரும், நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று (17.10.2025) சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர கொள்கை முடிவு எடுத்து, சாதி ஆணவக் கொலைகளை உறுதியாக தடுக்கும் வகையில், பொருத்தமான பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

இந்தக் கோரிக்கை தொடர்பாக குரல் கொடுத்தும், போராடியும் வந்த அனைத்துப் பிரிவு மக்களுக்கும், அமைப்புகளுக்கும் நன்றி பாராட்டி வாழ்த்துகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story