4 மாவட்டங்களில் மின் கட்டணம் கட்டுவதற்கு சலுகை அறிவிப்பு


4 மாவட்டங்களில் மின் கட்டணம் கட்டுவதற்கு சலுகை அறிவிப்பு
x

அபராதத் தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ,

அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாட்டில் வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10.12.2024 வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது .

1 More update

Next Story