காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் வி.வி.டி. சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய மை இந்தியா யூடியூப் சேனல் நடத்தி வரும் முக்தார் அகமது என்பவரை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் வி.வி.டி. சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் சண்முகம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர்கள் ராஜன், செந்தூர்பாண்டி, சேகர், ஐசன் சில்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அகமது முக்தாரின் உருவ படத்தை தீயிட்டு கொளுத்தினர். மேலும் அவர் மீது வன்முறையை தூண்டும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாநில செயலாளர் ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், எஸ் பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், மாநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முத்துமணி, அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், வடக்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவி கமலாதேவி, முன்னாள் மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி முத்து விஜயா, மாவட்ட செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story