தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் 11-ந் தேதி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை


தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் 11-ந் தேதி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை
x

தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பா.ஜனதா தொடர்ந்து முறைகேடுகளை நிகழ்த்தி வெற்றி பெற்று வருவதை தலைவர் ராகுல்காந்தி ஆதாரங்களுடன் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.

ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்கிற மனோபாவம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆளும் கட்சியாக உள்ள பா.ஜனதா மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் தொடர்ந்து வெற்றி பெறுவதில் மிகப்பெரிய மோசடியை செய்வதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருப்பதால் தான் பா.ஜனதா தொடர்ந்து வெற்றிகளை பெற முடிகிறது.

தலைவர் ராகுல்காந்தி தோலுரித்துக் காட்டிய இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜனதாவுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கட்சிகள் சார்பாக வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சிகள் சார்பாக 11-ந் தேதி மாலை 4 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது (செல்வப்பெருந்தகை) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story