1,271 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கலந்தாய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


1,271 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கலந்தாய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

செவிலியர் பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை,

சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது,

கடந்த ஆண்டு மட்டும் கொரோனா காலத்தில் பணியாற்றிய 1,412 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டார்கள். இந்த நிலையில், 1,271 செவிலியர்கள் பணியிடங்களுக்கு வரும் 14, 15 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரந்தர பணி ஆணைகள் தரப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து, கொரோனா காலங்களில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு பணி தரப்படவில்லை என்ற நிலை இருக்காது. மேலும், 300 செவிலியர்கள் பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 27-ந் தேதி 2,553 டாக்டர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது. இதில், 24 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story