சென்னை ஐ.டி காரிடரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


சென்னை ஐ.டி காரிடரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2025 11:15 PM IST (Updated: 19 Nov 2025 11:15 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தரமணி, ஐ.டி காரிடர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 20.11.2025 (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில், செயற் பொறியாளர்/இயக்கம் மற்றும் பராமரிப்பு/ஐ.டி காரிடர் அலுவலகம், / வது தளம், 110 கி.வோ, டைடல் பார்க் துணை மின் நிலைய வளாகம், சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, தரமணி, சென்னை-113 அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/சென்னை மி.ப.வ/தெற்கு (அடையாறு) கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story