தர்மபுரி அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து


தர்மபுரி அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
x

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தர்மபுரி

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு சைக்கிள் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி புறப்பட்டது. லாரியை உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரூக் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் சுமார் 45 வயது மதிக்கத்தக்க கிளீனர் உடன் வந்தார்.

இந்த லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு முதல் வளைவில் நேற்று காலை வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் உதவியோடு மீட்புக்குழுவினர், விபத்துக்குள்ளான கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story