ராமேஸ்வரத்தில் தொடர் கனமழை; இருளில் மூழ்கிய பாம்பன் பாலம்

பகல் நேரத்திலும் பாம்பன் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.
ராமேஸ்வரத்தில் தொடர் கனமழை; இருளில் மூழ்கிய பாம்பன் பாலம்
Published on

ராமநாதபுரம்,

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்தது. இதனால் தீபாவளி தினத்தின்போது பட்டாசுகள் வெடிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதற்கிடையில் பாம்பன் பாலம் முழுவதும் இருளில் மூழ்கி காட்சியளித்தது. வானம் மிகவும் மேகமூட்டத்துன் காணப்பட்டதால் போதிய வெளிச்சம் இல்லாமல் பகல் நேரத்திலும் பாம்பன் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. அதே சமயம் அங்கு நிலவிய இதமான கால சூழலை அனுபவிக்க பாம்பன் பாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள், ஆர்வத்துடன் புகைப்படங்களை எடுத்துச் சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com