கோவைக்கு வந்த கிரிக்கெட் வீரர் தோனி; விமான நிலையத்தில் சூழ்ந்த ரசிகர்கள்


கோவைக்கு வந்த கிரிக்கெட் வீரர் தோனி; விமான நிலையத்தில் சூழ்ந்த ரசிகர்கள்
x

தோனியை வரவேற்கும் வகையில் ரசிகர்கள் உற்சாகமாக கோஷங்களை எழுப்பினர்.

கோவை,

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு வருகை தந்தார். இதனிடையே, தோனி கோவைக்கு வரும் தகவலறிந்து, அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் குவியத் தொடங்கினர்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து தோனி வெளியே வந்தபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவரை வரவேற்கும் வகையில் உற்சாகமாக கோஷங்களை எழுப்பினர். மேலும் அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக ரசிகர்கள் முயற்சி செய்தனர்.

இதற்கிடையில், தோனியின் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார், தோனியை சூழ்ந்து நின்ற ரசிகர்களை விலக்கி, அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அவரை பின்தொடர்ந்து சென்ற ரசிகர்களை பார்த்து காரில் இருந்து கையசைத்தவாறு, தனியார் நிகழ்ச்சிக்கு தோனி புறப்பட்டுச் சென்றார்.

1 More update

Next Story