கடலூர்: கனமழையால் மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழந்த சோகம்

கனமழையால் மரம் சாய்ந்து அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது விழுந்தது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் கனமழையால், மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஒரத்தூர் காவல்நிலைய சரகத்துக்கு உள்பட்ட சாத்தமங்கலம் அருகே இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அங்கு சாலையோரம் இருந்த புளியமரம் ஒன்று கனமழையால் சாய்ந்து அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது விழுந்தது.
இதில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மரிய சூசை, அவரது மனைவி பிலோல் மேரி மற்றும் வனதாஸ் மேரி ஆகியோர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர்கள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த, மீட்புப் படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story






