டிட்வா புயல் முன்னெச்சரிக்கை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை,
‘டிட்வா' புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயலுக்கு ‘டிட்வா' என பெயரிடப்பட்டு உள்ளது. ஏமன் நாடு இந்த பெயரை பரிந்துரைத்து இருக்கிறது. டிட்வா புயல் தற்போது தற்போது 10 கி.மீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது வருகிற 30-ந்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ‘டிட்வா' புயல் முன்னெச்சரிக்கை நவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் சென்னை எழிலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்ளுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது,
அதிக மழை பெய்யும் எனக் கூறியிருக்கிறார்கள். போதிய மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . தலைமைச் செயலர் முன்னிலையில் உயரதிகாரிகள் கூட்டம் கூட்டி முன்னெச்சரிக்கை நவடிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.






