புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று மாலைக்குள் கரை திரும்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய வங்க கடல் பகுதியில் புயல் உருவாக உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, வானிலை ஆய்வு மையத்திலிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் செய்தியில், 24.10.2025 முதல் 27.10.2025 வரையிலான தேதிகளில், தமிழக கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார்வளைகுடர் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 25.10.2025 அன்று மத்திய வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று (24.10.2025) மாலைக்குள் கரை திரும்பிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






