டெல்லி கார் வெடிப்பு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - விஜய்


டெல்லி கார் வெடிப்பு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - விஜய்
x
தினத்தந்தி 11 Nov 2025 12:19 AM IST (Updated: 11 Nov 2025 1:17 AM IST)
t-max-icont-min-icon

கார் வெடிப்புச் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக விஜய் தெரிவித்தார்.

சென்னை,

டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. திடீரென அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே கார் வெடிப்புச் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அந்த விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story