தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயண விவரம்


தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயண விவரம்
x

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 13-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.

சென்னை,

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார். அதன்படி வரும் 13-ந்தேதி, த.வெ.க. தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 13-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது. 13ம் தேதி திருச்சி சத்திரம் பகுதியில் தொடங்கி அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளிலும் பிரசார பயணத்தை விஜய் மேற்கொள்ள உள்ளார். `தளபதி 2026 அரசியல் பிரசார பயணம்' என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

1 More update

Next Story