தூத்துக்குடி போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு: எஸ்.பி. வாழ்த்து

தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.யிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில், சங்கரலிங்கபுரம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய கொலை வழக்குகளில் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அமைத்த தனிப்படை போலீசார் கைது செய்தனர். அந்த தனிப்படை போலீசாரின் சிறந்த பணிக்காக தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சங்கர்ஜிவால் கடந்த 12.6.2025 அன்று சென்னை காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்தில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.யிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற தனிப்படை போலீசாரை நேற்று (16.6.2025) மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Related Tags :
Next Story






