விவசாயிகளுக்கு ஆதரவாக தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

மா விவசாயிகளின் வாழ்வதரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை,
தேமுதிக சார்பில் இந்த கிருஷ்ணகிரியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மா விவசாயிகளின் வாழ்வதரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேடையில் மாங்காய்களை கொட்டியும், மா மரங்களில் மா விவசாயிகளின் குடும்பங்களின் உருவ பொம்மைகளை தூக்கிலிட்டு தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உருவ பொம்மைகளை வைக்க போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு தேமுதிவினர்க்கும் போலீசாரும் இடையே சற்று நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story






