தி.மு.க. கூட்டணி கட்சிகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது: எச்.ராஜா


தி.மு.க. கூட்டணி கட்சிகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது: எச்.ராஜா
x

இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சி,

திருச்சியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அவர் கூறியதாவது,

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளில் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி ஏற்ற பிறகு பொருளாதாரத்தின் 11-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

தமிழகத்தில் போலீசார் கஞ்சா வழக்கு போடுகின்றனர். ஆனால் இதுவரை ஒரு கிராம் கூட சிந்தடிக் ட்ரக் பயன்படுத்தியதாக எந்த வழக்கும் பதியப்படவில்லை. இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக பஞ்சாப் தான் இருந்தது. தற்பொழுது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது.வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை தி.மு.க உடைக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story