சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட இயக்கம் திமுக: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட இயக்கம் திமுக: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

மதசார்பின்மை என்ற சொல்லை அரசமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க மத்திய பாஜக அரசு துடிக்கிறது என்று மு.க. ஸ்டாலின் சாடினார்.

நெல்லை,

நெல்லையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்காக எதிராக ஒருபுறம் சட்ட ரீதியாக போராடி வருகிறோம். மக்கள் தங்களது வாக்குகளை உறுதி செய்யவும் மறுபுறத்தில் திமுகவினர் துணையாக இருந்தனர். வாக்குரிமை பறிக்கப்பட்டு இருந்தால் திமுகவினர் வீடுதேடி வந்து உதவி செய்வார்கள். மதசார்பின்மை என்ற சொல்லை கேட்டாலே மத்திய பாஜக அரசுக்கு வேப்பங்காய் போல கசக்கிறது.

மதசார்பின்மை என்ற சொல்லை அரசமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க மத்திய பாஜக அரசு துடிக்கிறது. பாஜகவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும்தன்மை தமிழ்நட்டுக்கும் திமுகவுக்கும் உள்ளது .தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். ஒற்றுமையாக வாழும் மக்களை பிரித்து வைக்க நினைக்கின்றனர். மதத்தின் பெயரால் ஒருவர் உங்களது உணர்வுகளை தூண்டினால், அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story