தி.மு.க. அரசு போலியாக சேர்த்த வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தி.மு.க.கூட்டணி கட்சிகள் தற்போது பிரதமர் மோடி ஆட்சியின்போது மட்டும் எதிர்த்து போராட்டம் நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் சுதேசி பொருட்களையே அனைவரும் பயன்படுத்தவேண்டும். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, நான் உள்பட அனைவரும் தற்போது வாட்ஸ்-அப் செயலியை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து நமது இந்திய அரட்டை செயலியை பயன்படுத்தி வருகிறோம். இதுவரை சுதந்திரம் அடைந்து 8 முறை இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டிருக்கிறது.
அப்போது எல்லாம் எதிர்க்காத தி.மு.க.கூட்டணி கட்சிகள் தற்போது பிரதமர் மோடி ஆட்சியின்போது மட்டும் எதிர்த்து போராட்டம் நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது.இந்த திருத்தப்பணியின் மூலம் தி.மு.க. 2 ஆண்டுகளாக சேர்த்த போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்படுவார்கள். அந்த அச்சத்தில் தான் அவர்கள் இதனை எதிர்கின்றனர். இந்து மதத்திற்கு எதிராக பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடியை நீதிமன்றமே தண்டித்தது. ஆனால். அவருக்கு தி.மு.க. மீண்டும் கட்சி பதவி கொடுத்து அங்கீகரித்துள்ளது தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.






