மின்சார ரெயில்களில் மற்றவர்களுக்காக இடம் பிடித்து வைக்க கூடாது; தெற்கு ரெயில்வே

மின்சார ரெயில்களில் உள்ள இருக்கைகள், 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
சென்னை,
சென்னை மின்சார ரெயில்களின் தினமும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ரெயிலில் சில பயணிகள், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடத்து கொள்வதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி, ரெயில்கள் நிற்பதற்கு முன்பே, இடம்பிடிப்பதற்காக சிலர் ஓடும் ரெயிலில் ஏறுவது, ரெயில் பெட்டிகளின் நுழைவாயிலில் அமர்ந்து, மற்ற பயணிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் இடையூறாக இருப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற செயல்களால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் பயணிகளுக்கு கடும் இடையூறாக உள்ளது. மேலும், மின்சார ரெயில்களில் உள்ள இருக்கைகள், 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இடம் பிடிப்பதும், இருக்கைகள் மீது கால்களை வைப்பதும் ரெயில்வே விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






