“காங்கிரஸை மட்டும் நம்பாதீர்கள்”- விஜய்க்கு விஜயபிரபாகரன் எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியை மட்டும் நம்பி விடாதீர்கள் அது மீனுக்கு தூண்டில் போடுகிறது மாதிரி என்று தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் பாசாரில் நடைபெற்ற மாநாட்டில் தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் பேசியதாவது:-
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் தே.மு.தி.க.வின் சேவையும், தேவையும் வேண்டும். எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கிறீர்களோ அதுதான் உங்களை அரியணையில் அமர்த்தும். தே.மு.தி.க. எங்கே சேர்கிறதோ அதுதான் மெகா கூட்டணி, அதுதான் வலிமையான கூட்டணி.
தற்போது ஜனநாயகன் திரைப்படம் திரையிடுவதில் பிரச்சினை இருக்கிறது. விஜய்க்கு தம்பியாக, விஜயகாந்தின் மகனாக ஒரு அறிவுரை கூறுகிறேன். இன்று காங்கிரஸ் கட்சி, உங்களுக்கு ஆதரவு கொடுப்பதுபோல் பேசுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியை மட்டும் நம்பி விடாதீர்கள். அது மீனுக்கு தூண்டில் போடுகிறது மாதிரி, அதில் நீங்கள் மாட்டிக்கொள்ளாதீர்கள். நீங்கள் நன்றாக வர வேண்டும்.
ஏனென்றால் நான் போட்டியிட்ட விருதுநகரில், எனக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் என்ன செய்தார்கள் என்று தெரியும். நீங்கள் சினிமா துறையுடன் சேருங்கள். காங்கிரஸ் கட்சியினர் உங்களுடன் கூட்டணிக்கு வருவதுபோல் வந்து, தி.மு.க.வுடன் கூட்டணி பேரம் பேசி அங்குதான் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.






