குடங்களில் பிடித்த எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் - மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தல்


குடங்களில் பிடித்த எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் - மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jun 2025 4:09 PM IST (Updated: 8 Jun 2025 4:37 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.

சென்னை,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து மராட்டியத்திற்கு 10,000 லிட்டர் சமையல் எண்ணெயை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

லாரி மீது வாகனம் ஒன்று மோதியதால், லாரியில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் குடம் குடமாக எடுத்து வந்து எண்ணெயை பிடித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து கொட்டிய சமையல் எண்ணெயை குடத்தில் பிடித்து சென்ற மக்கள், அந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டாம், லாரியில் இருந்தது சுத்திகரிக்கப்படாத, சமையலுக்கு பயன்படுத்த முடியாது என்று நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

இந்தநிலையில், நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

08.06.2025-ந் தேதி 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மராட்டிய மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் உட்கோட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதன்சந்தை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது வாகனம் பழுது ஏற்பட்டு மேம்பாலத்தில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது அதிகாலை 05.00 மணியளவில் அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் மோதியதில் ஆயில் டேங்கில் கசிவு ஏற்பட்டு சோயா ஆயில் ரோட்டில் ஊற்றியது. பொதுமக்கள் சிலர் இந்த சோயா ஆயிலை பிடித்து செல்வது போன்ற காணொலி சமூக ஊடகங்களில் பரவியது.

விபத்தில் கசிவு ஏற்பட்டு வெளியேறிய சோயா ஆயிலானது சுத்திகரிக்கப்படாதது மற்றும் சமையலுக்கு பயன்படாத எண்ணெய் ஆகும். எனவே, இந்த சோயா ஆயிலை பொதுமக்கள் யாரும் உணவு பொருளாக பயன்படுத்த வேண்டாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story