நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. தலைவராவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் தெரியுமா ? கே.என்.நேரு


நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. தலைவராவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் தெரியுமா ? கே.என்.நேரு
x

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்துவிட்டு எங்களை பற்றி பேசட்டும் என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்

நெல்லை,

நெல்லையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதவாது,

தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராகி உள்ளார். அவர் தலைவராக வருவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் என்பதை பொது வெளியில் சொல்ல முடியாது.அவர்கள் முதலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்துவிட்டு கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சி அமைப்பார்களா? என்பதை முடிவு செய்துவிட்டு எங்களை பற்றி பேசட்டும்.

வருகிற 8-ந்தேதி நடைபெறும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதலமடைந்த சாலைகளை செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பான முறையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story