பிரபல யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு


பிரபல யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
x
தினத்தந்தி 5 July 2025 7:12 PM IST (Updated: 5 July 2025 7:20 PM IST)
t-max-icont-min-icon

பிரபல யூடியூபர் மீது வரதட்சணை புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகிலுள்ள வளையாபதி பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சன். டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமாகி பிறகு டெக் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் யூடியூப் சேனலை சுதர்சன் ஆரம்பித்தார் சுதர்சன். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்த, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விமலா தேவி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது.

பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு மார்ச் மாதம் மதுரையில், மருத்துவர் விமலா தேவியை சுதர்சன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னிடம் மேலும் 20 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக யூடியூபர் சுதர்சன் மற்றும் குடும்பத்தினர் மீது அவரது மனைவி விமலா தேவி கடந்த ஜூன் 27 ஆம் தேதியன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

வீடு கட்ட கூடுதல் பணம் வேண்டும் என்று கர்ப்பிணி மனைவியை அடித்து விரட்டியதாக சுதர்சன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரூ.5 லட்சம் கொடுக்க மனைவி தயாரான நிலையில், ரூ.10 லட்சம் கேட்டு சுதர்சன் வீட்டார் கொலை மிரட்டல் விடுத்தாக புகாரளிக்கப்பட்டுள்ளது. காதல் மனைவி அளித்த புகாரின் பேரில் சுதர்சன் தாய் மாலதி, தந்தை சுந்தர்ராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து இருந்தனர். இதையடுத்து தற்பொது சுதர்சன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story