தமிழ்நாட்டில் போதை பழக்கம் பெரிய அளவில் குறைந்திருக்கிறது - மா சுப்பிரமணியன்


தமிழ்நாட்டில் போதை பழக்கம் பெரிய அளவில் குறைந்திருக்கிறது - மா சுப்பிரமணியன்
x

தமிழகத்தை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றி இருக்கிறோம் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; போதைப் பொருள்களுக்கு எதிராக இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு எவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை எதிர்க்கட்சியினர் அனைவரும் அறிவார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்தது. குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கூறினார். இல்லையென மறுத்த நிலையில், மறுநாளே 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பான் மசாலா உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்று காட்டினர்.

அக்கறை உள்ள முதல்வராக இருந்திருந்தால் எங்கே கிடைத்தது எனக் கேட்டு நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனால், 21 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.நாங்கள் பொறுப்பேற்ற பிறகு மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்து போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளோம். கஞ்சாவைப் பொறுத்தவரை தமிழகத்தில் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். எதிர்க்கட்சியினர் எங்கேயாவது விற்கிறார்கள் என்று கூறினால், அவர்களின் பெயர் ரகசியம் காத்து நடவடிக்கை மேற்கொள்வோம். பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்களுக்கு எதிராக ஆண்டுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story